பொங்கல் ஸ்பெஷல்: ராயலசீமா வெண் பொங்கல்

Loading...

பொங்கல் ஸ்பெஷல்: ராயலசீமா வெண் பொங்கல்

ராயலசீமா வெண் பொங்கல்


தேவையானப்பொருட்கள்:

ப.அரிசி – 3/4 கோப்பை
ப.பருப்பு – 1/2 கோப்பை
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
முந்திரி – 5
உப்பு – ருசிக்கு
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் – 2 மே.க
நெய் – 2 மே.க
மிளகு – 1/2 தே.க
சீரகம் – 1/2 தே.க
பிருஞ்சி இலை – 1
கருவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் முந்திரியை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
தாளிக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
அரிசி + பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு சேர்க்கவும்.
3 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு குக்கரில் வேக விடவும்.
முந்திரியை சேர்த்து கிளறவும்.
சுட சுட பொங்கல்…..சாம்பார் அல்லது சட்னி இல்லை என்றால் இரண்டையும் பண்ணிக் கொண்டு அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.
உண்ட மயக்கம்…..போன பின்பு…..சும்மாவே உண்டமயக்கம் வரும் ஆனா இந்த பொங்கல் வகையறாக்கள் சாப்பிட்டா கேட்கவும் வேண்டுமோ…?
அப்புறமா வந்து சொல்லுங்கள்…எப்படி இருந்தது என்று…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply