பொங்கல் ஸ்பெஷல்: சிறுதானியப் பொங்கல்!

Loading...

பொங்கல் ஸ்பெஷல்: சிறுதானியப் பொங்கல்!


தேவையானப்பொருட்கள்:

சாமை – 1 கப் (டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) ஆங்கிலத்தில் LITTLE MILLET
பயத்தம்பருப்பு – ¼ கப்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
தாளிக்க:-
பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
ஒன்றிரண்டாக பொடித்த மிளகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
நெய் (அ) எண்ணெய் – தேவையான அளவு
முந்திரிப்பருப்பு – சிறிதளவு

செய்முறை:

பயத்தம்பருப்பை வாணலியில் சற்றே வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சாமையை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறப் போடவும். வாணலியில் நெய்யோ அல்லது எண்ணெயோ சிறிதளவு வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். குக்கரில் சாதம் வைப்பது போல் பாத்திரத்தில் சாமை, பயத்தம்பருப்பு, தாளித்த பொருட்கள், உப்பு, தண்ணீர் (1க்கு 1½) பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் கொடுத்து நிறுத்தவும். சூடான, சுவையான பொங்கல் தயார்.
சட்னி, சாம்பாரோடு சாப்பிட சுவையாக இருக்கும். சுடச்சுட இருந்ததால் நான் வெறுமனேயே சாப்பிட்டு விட்டேன்….:) சாதாரணமாக அரிசியில் செய்யும் பொங்கலில் அரிசியும், பருப்பையும் வேகவைத்துக் கொண்டு, கொஞ்சம் மசித்து விட்டு தாளித்துக் கொட்டுவேன். ஆனால் இதை நீங்கள் மசித்தால் கூழாகி விடும். அதனால் தாளித்த பின்னர் குக்கரில் வைப்பது தான் சரி. நேரிடையாக குக்கரிலேயே தாளித்தும் செய்யலாம். எப்படி வசதியோ அப்படி செய்து கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply