பேய் படங்களுக்கு மாறிய கதாநாயகர்கள்

Loading...

பேய் படங்களுக்கு மாறிய கதாநாயகர்கள்


தமிழ் படங்களின் கதைகள் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபடும். ஒரு காலத்தில் ரசிகர்கள் காதல் படங்களை விரும்பி பார்த்தார்கள். இதனால் அதுபோன்ற படங்கள் நிறைய வந்தன. அதன்பிறகு அதிரடி சண்டை படங்களும், நகைச்சுவை படங்களும் முக்கியத்துவம் பெற்றன.

இப்போது பேய் படங்களுக்கு ரசனை மாறி இருக்கிறது. காதல் கதைகள் குறைந்துள்ளன. கடந்த வருடம் 204 படங்கள் வெளிவந்தன. இவற்றில் பேய் கதைகளாக வந்தவை மட்டும் 50 படங்கள். இவை அனைத்துமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி கொடுத்தன. லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-2 பேய் படம் எல்லா படங்களையும் வசூலில் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தது.

அதன் மூன்றாம் பாகமும் விரைவில் வெளிவர இருக்கிறது. இதுபோல் சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மனை பேய் படமும் வசூலில் சக்கைப்போடு போட்டது. மாயா, யாமிருக்க பயமே, டிமான்டி காலனி, டார்லிங், பிசாசு, பேய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட பல பேய் படங்கள் வரவேற்பு பெற்றன. நடிகைகளும் பேய், திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

அனுஷ்காவின் அருந்ததி பேய் படத்தின் வெற்றிதான் அவர்களின் இந்த ஆசைக்கு அடித்தளமிட்டது. அரண்மனை பேய் படத்தில் ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்தனர். மாயா படத்தில் நயன்தாரா பேயாகவே வந்தார். இப்போது 55-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தயாரிப்பில் உள்ளன. திரிஷா பேயாக நடிக்கும் அரண்மனை-2 படம் விரைவில் வெளிவர இருக்கிறது. லாரன்ஸ், நாகா, பைரவா என்ற இரண்டு திகில் கதைகளை இயக்கி வருகிறார்.

சுந்தர்.சி உதவியாளர் இயக்கிய ஹலோ நான் பேய் பேசுறேன் படம் திரைக்கு வர தயாராகிறது. நடிகைகளை தொடர்ந்து கதாநாயகர்களும் பேய் படங்களுக்கு மாறுகிறார்கள். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி பேய் படத்தின் வெற்றிக்கு பின்னரே நடிகர்கள் பேய் படங்களுக்கு திரும்பினார்கள். சூர்யா, சித்தார்த், அருள்நிதி, பா.விஜய், ஜி.வி.பிரகாஷ், வினய், சந்தானம் உள்ளிட்ட பலர் பேய் படங்களில் நடித்துள்ளனர். தற்போது ஜெயம் ரவி மிருதன் என்ற அமானுஷ்ய படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஸ்ரீகாந்த் சவுகார்பேட்டை என்ற படத்தில் பேயாகவே நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பரத்தும் பொட்டு என்ற படம் மூலம் பேய் கதைக்கு மாறி இருக்கிறார். சத்யராஜ், ஜாக்சன் துரை என்ற படத்தில் பேயாக நடிக்கிறார். மேலும் பல கதாநாயகர்கள் பேய் படங்களில் நடிக்க தயாராகிறார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply