பேபி கார்ன் ஃபிங்கர்ஸ்

Loading...

பேபி கார்ன் ஃபிங்கர்ஸ்
தேவையானவை:
பிஞ்சு பேபிகார்ன் – 10, மைதா மாவு – 3 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:
பேபிகார்னை 2 இஞ்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி சாஸ், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு கெட்டியாக பிசையவும். இதனுடன் பேபி கார்ன் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஊறிய பேபி கார்ன்களை போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply