பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு ஒப்புதல்

Loading...


பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு ஒப்புதல்

dddds

நயன்தாராவுடனான காதல் முறிவு, ஹன்சிகாவுடனான காதல் முறிவு ஆகியவை சிம்புவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் தான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன் என்று விடாபிடியாக இருந்தவருக்கு, சமீபத்தில் காதல் தோல்வியை பற்றிய சிம்புவின் பீப் பாடல் பிரச்சினையும் அவரை மிகவும் மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வேதனையிலிருந்து சிம்புவை மீட்க அவரது பெற்றோர்களும் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதனால், காதல் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருந்தவர் தற்போது பெற்றோர்கள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் பெற்றோர் மற்றும் குடும்ப நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளது. அந்த இடத்தில் பெற்றோர்கள் சிம்புவை சீக்கிரமாகவே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த, சிம்புவும் தனக்கு பெண் பார்க்குமாறு பெற்றோர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு சிம்பு தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களும் உடனடியாக சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply