பெண்களே தினமும் மேக்கப் போடாதீங்க

Loading...

பெண்களே தினமும் மேக்கப் போடாதீங்கபெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட தினமும் முகத்திற்கு மேக்கப் போடுவார்கள்.
தினமும் மேக்கப் போடுவதன் மூலம், மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, இயற்கை அழகை முற்றிலும் அழித்து, சருமத்தையே ஒரு மாதிரி அசிங்கமாக வெளிக்காட்டும்.
நல்ல தரமான பொருளாக இருந்தாலும், சருமத்தில் தினமும் பயன்படுத்தும் போது, அது சரும அழகையே கெடுத்துவிடும்.
சருமத்தின் ஈரப்பசையை அதிகரிக்க அன்றாடம் மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி நீண்ட நாட்கள் பயன்படுத்துவதால், அதில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தில் அரிப்புகள், சருமத்தை கருமையாக்குவது போன்றவற்றை ஏற்படுத்தி சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சருமத்திற்கு க்ரீம், சோப்பு மற்றும் பாடி லோசன் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள், மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். உதாரணமாக, சில ப்ளீச்சிங் க்ரீம்களில் மெர்குரி அதிகமாக இருக்கும். இவை சிறுநீரகங்களையும், நரம்புகளையும் பாதிக்கும்.
முகத்திற்கு போடும் பவுடரில் உள்ள கனிமங்களை தொடர்ந்து சுவாசித்தால், அவை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே நல்ல நறுமணம் உள்ளது என்று பவுடரை நிறைய பூசிக் கொள்ளாதீர்கள்.
ஷேவிங் க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர்களில் பாராபீன் என்னும் பதப்படுத்தும் பொருள் உள்ளது. ஆகவே இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, சரும புற்றுநோயும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply