பூவன் பழ பணியாரம்

Loading...

பூவன் பழ பணியாரம்
தேவையானவை:
கனிந்த பூவன் வாழைப்பழம் – 3 (துண்டு செய்து மிக்ஸியில் அடிக்கவும்), கோதுமை மாவு – அரை கப், அரிசி மாவு – ஒன்றரை கப், வெல்லம் – 2 கப், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை.


செய்முறை:
கோதுமை மாவு, அரிசி மாவை ஒன்றாகக் கலக்கவும். மிக்ஸியில் அடித்த பூவன் பழம், வறுத்த தேங்காய் இரண்டையும் மாவில் சேர்க்கவும். வெல்லத்தில் அரை கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாக மாவில் ஊற்றவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். நெய், எண்ணெயைக் கலந்துகொள்ளவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, நெய் – எண்ணெய் கலவையை விட்டு, கொஞ்சம் மாவு ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply