புழுங்கல் அரிசி வெல்ல கேசரி

Loading...

புழுங்கல் அரிசி வெல்ல கேசரி
தேவையானவை:
புழுங்கல் அரிசி, பொடித்த வெல்லம் – தலா ஒரு கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை, முந்திரி – 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.


செய்முறை:
வாணலியில் புழுங்கல் அரிசியை பொரி மாதிரி நன்றாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வெல்லத்துடன் நீர் சேர்த்து சூடாக்கி, வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்துடன் 3 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் மிக்ஸியில் அரைத்த அரிசி மாவை சேர்த்துக் கிளறவும். அரிசி மாவு நன்கு வெந்ததும் நெய், ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply