புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு

Loading...

புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு”பர்பிள் உருளைக்கிழங்கு” என்றழைக்கப்படும் ஊதா நிற உருளைக்கிழங்கு, ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது என்று கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில், இது தற்போது புற்றுநோயையும் குணப்படுத்தும் என்று நிரூபணமாகியுள்ளது.
மேலும், இந்த உருளைக்கிழங்குகள் வேக வைத்த பின்னர் நீல நிறமாக மாறும் குணமுடையது.
அதாவது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஹெர்ஷ்லே புற்றுநோய் நிலையம் மேற்கொண்ட ஆய்வில் ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கவல்லது என நிரூபணமாகியுள்ளது.
இவ்வாய்வில், அடுமனையில் வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கின் மூலம் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
இது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலியின் மீது சோதனையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
மேலும், ஒரு நாளில் நடுத்தர அளவில் உள்ள இந்த உருளைக்கிழங்கை மதியமும், இரவும் எடுத்துக் கொள்வதன் மூலமோ அல்லது பெரிய உருளைக்கிழங்கு ஒன்றை நோய் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணுவதன் மூலமாக அவர்களுக்கு இந்த புற்றுநோய் குணமாகும்.
இத்தகவலை, ஆய்வில் தலைமை வகித்த ஜெய்ராம் கே.பி. வனமாலா தெரிவித்தார்.
அத்துடன், உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன்மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக்கிழங்கை உட்கொண்டால் போதும் என அவர்கள் தமது ஆய்வின் மூலமாக தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply