புதிய அம்சங்களுடன் BLU Studio Energy ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

புதிய அம்சங்களுடன் BLU Studio Energy ஸ்மார்ட் கைப்பேசிசமகாலத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டுள்ள நிலையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக ஒருமுறை சார்ஜ் செய்தது இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் வரை தொடர்ந்து பாவனை செய்யக்கூடிய மின்கலத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகவுள்ளது.
BLU Studio Energy எனும் இக்கைப்பேசியானது 1.3 GHz MediaTek M6582 Quad-Core processor, பிரதான நினைவகமாக 1 GB RAM, 8 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாக காணப்படுகின்றது.
5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான திரை, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 149 டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply