புதினா – வேர்க்கடலை தட்டை

Loading...

புதினா - வேர்க்கடலை தட்டைதேவையானவை:பச்சரிசி மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், உளுத்தம் மாவு (வீட்டில் வறுத்து பொடித்தது) – கால் கப், புதினா விழுது – 2 டீஸ்பூன், வறுத்த வேர்கடலை – 50 கிராம், வெண்ணெய் – 15 கிராம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை: வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக பொடிக்கவும். பச்சரிசி மாவை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, பொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, புதினா விழுது, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை வெள்ளைத் துணியில் சிறிய தட்டைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply