பிரேமம் படத்தை பாராட்டிய சங்கர்

Loading...

பிரேமம் படத்தை பாராட்டிய சங்கர்

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான மலையாள படம் பிரேமம். இப்படம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழ்நாட்டில் வெளியானது.

இங்கேயும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சென்னையில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தொடர்ந்து 230 நாட்களாக ஓடிய இப்படம் பொங்கல் தினத்தன்று ‘கதகளி’, ‘தாரை தப்பட்டை’, ‘கெத்து’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியானதால் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இதனால் பிரேமம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் ‘பிரேமம்’ படத்தை இயக்குனர் சங்கர் பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த அவர், ‘உயிரோட்டமுள்ள யதார்த்தமான படம் இது. பிரேமம் படக்குழுவினருக்கும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply