பிரெட் க்ரிஸ்பிஸ்

Loading...

பிரெட் க்ரிஸ்பிஸ்
தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் – 10, வெங்காயம் – 2, தக்காளி – 3, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருஞ்சீரகம் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி. அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும்.
இது, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply