பிரமிக்க வைக்கும் Le Max Pro ஸ்மார்ட் போன்

Loading...

பிரமிக்க வைக்கும் Le Max Pro ஸ்மார்ட் போன்சீனா மொபைல் நிறுவனமான LeTv உலகின் முதல் ஸ்னாப் ட்ராகன் 820 வசதி கொண்ட ஸ்மார்ட் போனாக தனது Le Max Proவை தயாரித்துள்ளது.
உலகின் முதல் Snap Dragon 820 ப்ராசசர் என்பதையும் தாண்டி அமெரிக்க மொபைல்கள் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பை தகர்க்கும் முதல் சீன மொபைலாகவும் இதனை LeTv நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், அதற்குள்ளாகவே எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

இந்த மொபைலின் விலை 3,500 சீன யென் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய மதிப்பில் ரூ.35,500 விலையில் கிடைக்கும்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் இது விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட லி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow) வசதியுடன் இயங்குகிறது.

லி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 1440×2560 பிக்சல்கள் 6.33 இன்ச் QHD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இதன் மூலன் திரைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை துல்லியமாக பார்த்து ரசிக்கலாம். மேலும் 4ஜிபி Ram இணைந்துள்ளது.

இதில் 32ஜிபி, 64ஜிபி மற்றும் 128ஜிபி Internal Storage வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. துல்லியமான 21MP பின்புற கமெராவை கொண்டுள்ளது.

இந்த கைப்பேசி3400mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. 3G 4G, LTE வசதியும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply