பித்த தலைவலியை குணப்படுத்தும் தான்றிக்காய்

Loading...

பித்த தலைவலியை குணப்படுத்தும் தான்றிக்காய்இதன் இலை, கொழுந்து, பட்டை,காய், அதன் தோல், கெட்டியான கொட்டை முதலியன. தான்றிப்பொடியை தேனில் கலந்து கொடுக்க அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடியினால் கண் ஒளி பெருகும். புண்பட்ட இடத்தில் இதன் பருப்பை உரைத்து பூச புண்ணாறும். இதன் கொட்டை நீக்கி கருகாமல் வறுத்து பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்த தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.
* தான்றிப்பொடி 3 கிராமுடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்த நோய்கள் வாய் நீர் ஒழுகல் தீர்ந்து கண் பார்வை தெளிவுறும். * இதன் காயை நீர் விட்டு இழைந்து புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.

* தான்றிக்காய் தோலை வறுத்து பொடித்து தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்த மூலம் நிற்கும்.

* தான்றிக்காயை சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்கு சமமாக சர்க்கரை கலந்து தினம் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.

* தான்றிக்காய் தளிரை இடித்து சாறு பிழிந்து 20 மி.லி. அளவு 3 வேளை குடித்து வர தொண்டைக்கட்டு, கோழை கட்டல், மேல் மூச்சு வாங்கல் குணமாகும்.

* திரிபலா பொடி இரவில் தண்ணீரில் காச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply