பாம்பே காஜா

Loading...

பாம்பே காஜா
தேவையானவை:
மைதா மாவு – 150 கிராம், சர்க்கரை – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, கேசரி கலர் – சிறிதளவு.


செய்முறை:
மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply