பானகம்

Loading...

பானகம்
தேவையானவை:
வெல்லம் – 200 கிராம், புளி – 50 கிராம், பொடித்த சுக்கு – ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் – 2, புதினா இலைகள் – 5, எலுமிச்சைப்
பழம் – 1.


செய்முறை:
வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும். பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:
உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். கோடைக்கு ஏற்ற பானம் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply