பழ லசான்யா | Tamil Serial Today Org

பழ லசான்யா

Loading...

பழ லசான்யாப்ரெட் – ஒரு பாக்கெட்
ஆப்பிள் – 2
ப்பீச் – 2
ப்ளம் – 2 அல்லது மாம்பழம் – ஒன்று
எலுமிச்சை – ஒன்று
ப்ரெட் தூள் – 2 கப்
ப்ரவுன் சீனி – 3/4 கப்
பட்டர் – சிறிது
பட்டை தூள் – கால் தேக்கரண்டி
பொடித்த பாதாம் – 3 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
ஐசிங் சீனி – 2 மேசைக்கரண்டி

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைக்கவும்.

ஒரு பானில்(Pan) பட்டரை உருக்கி அதில் ப்ரெட் துண்டுகளை இரு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்து வைக்கவும். எலுமிச்சையின் தோலை துருவி ஒரு மேசைக்கரண்டி அளவு எடுக்கவும். பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்து வைக்கவும். அவனை(oven) 350 டிகிரிக்கு முற்சூடு செய்து கொள்ளவும்.

ஆப்பிள், ப்பீச், மாம்பழம் மூன்றையும் சிறுத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் ஒரு கப் ப்ரெட் தூள், அரை கப் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் துருவிய எலுமிச்சை தோல் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.

மீதியிருக்கும் ப்ரெட் தூள், கால் கப் சீனி, பட்டைத் தூள், உப்பு இவற்றை கலந்து தனியாக வைக்கவும்.

பட்டர் தடவிய பேக்கிங் தட்டில் ப்ரெட் துண்டுகளை நெருக்கமாக அடுக்கி அதில் கலந்து வைத்துள்ள பழக் கலவையில் பாதி அளவை பரவலாக வைக்கவும்.

அதன் மேல் மீண்டும் ப்ரெட் துண்டுகளை அடுக்கி மீதி பழக்கலவையை வைத்து, கலந்து வைத்த ப்ரெட் தூள் கலவையை அதன் மேல் பரவலாக தூவி கைகளால் லேசாக அழுத்தி விடவும்.

பிறகு பொடித்த பாதாமை மேலே தூவவும்.

முற்சூடு செய்த அவனில் வைத்து 30 – 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

சுவையான பழ லசான்யா தயார். ஆறியதும் இதன் மேல் ஐஸிங் சீனி தூவி அல்லது கேரமல் சிரப் ஊற்றி துண்டுகளாக்கி பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN