பனீர் ஜாங்கிரி | Tamil Serial Today Org

பனீர் ஜாங்கிரி

பனீர் ஜாங்கிரி
தேவையானவை:
முழு உளுத்தம்பருப்பு – 200 கிராம், சர்க்கரை – 200 கிராம், துருவிய பனீர் – 100 கிராம், பச்சரிசி – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் எசன்ஸ் – 2 சொட்டு, ஃபுட் கலர் (கேசரி (அ) மஞ்சள்) – தேவையான அளவு, நெய் – 100 கிராம், எண்ணெய் – 200 கிராம்.


செய்முறை:
சர்க்கரையுடன் ஃபுட் கலர், சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து… நன்கு கெட்டியாக, மையாக அரைத்து சிறிதளவு கலர் சேர்க்கவும். நெய் – எண்ணெயை கடாயில் சேர்த்து சூடாக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய ஓட்டை போட்டு, கொதிக்கும் நெய் – எண்ணெயில் ஜாங்கிரிகளாக பிழிந்து, பொரித்தெடுக்கவும். அதை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து, பாகு உலரும் முன் துருவிய பனீர் சேர்க்கவும்.

Loading...
Rates : 0
VTST BN