பனீர் சப்பாத்தி ரோல்

Loading...

பனீர் சப்பாத்தி ரோல்

தேவையானவை :
சப்பாத்தி – 2, பனீர் – அரை கப் (துருவியது), வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் ( இரண்டும் சேர்த்து) – அரை கப், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் – தேவையான அளவு.



செய்முறை :
ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும்… பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் சேர்த்து வதக்கவும். பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி… துருவிய பனீர் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். சப்பாத்திக்குள் பனீர் கலவையை வைத்து சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். தக்காளி சாஸ், ராய்தா இதற்கு ஏற்ற சைட் டிஷ்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply