பக்டீரியாக்களை கொல்லக்கூடிய ஒளி துணிக்கை கண்டுபிடிப்பு

Loading...

பக்டீரியாக்களை கொல்லக்கூடிய ஒளி துணிக்கை கண்டுபிடிப்புமருத்துவத்துறையில் வைரஸ்கள் தவிர்ந்த ஏனைய நுண்ணங்கிகளினால் ஏற்படும் நோய்த்தாக்கங்களை குணப்படுத்த சிறந்த சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.
வைரஸ்கள் தமது அமைப்பை நேரத்துக்கு நேரம் மாற்றுவதனால் அவற்றுக்கு எதிரான சிகிச்சை முறையினை உருவாக்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

ஆனால் தற்போது சில வகை பக்டீரியாக்களும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்படாத தன்மை அதிகரித்துவருகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இவ்வாறான பக்டீரியாக்களை 90 சதவீதம் அழிக்கக்கூடிய நனோ துணிக்கைகளை வெளியிடும் ஒளி அலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சிகிச்சை முறையின் ஊடாக Salmonella, E. Coli, மற்றும் Staphylococcus போன்ற பக்டீரியாக்களை கட்டுப்படுத்த முடியும்.

இதேவேளை அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 2 மில்லியன் மக்கள் பக்டீரியா நோய்த்தொற்றுக்கு உள்ளாவதாகவும் அவர்களில் 23,000 பேர் மரணமடைவதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply