நொடியில் தயாராகும் ரெடிமெட் உணவுகள்: ஆபத்துக்களோ ஏராளம்!

Loading...

நொடியில் தயாராகும் ரெடிமெட் உணவுகள் ஆபத்துக்களோ ஏராளம்!பல வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து சாப்பிடுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டு ரெடிமெட் உணவுகளை செய்து சாப்பிடுகிறோம்.
ரெடிமெட் உணவுகள் எவ்வளவு விரைவில் சமையலாகிவிடுகிறதோ, அதே விரைவில் நோய்களும் நம்மை தொற்றிக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையான ரெடிமெட் உணவுகளை வாங்கும்போது, அதில் கலந்துள்ள பொருட்கள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

காலையில் சமைத்து வைக்கும் உணவு இரவில் கெட்டுப்போகும்போது, நீண்ட நாட்களாக கெடாமல் இருப்பதற்காக அந்த ரெடிமெட் உணவுகளில் நிச்சயம் இராசயனப்பொருட்கள் சேர்க்கப்படும்.

அப்படி சேர்க்கப்படும் இராசயனப்பொருட்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி, சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கின்றனர்.

ரெடிமெட் உணவுகள் பெரும்பாலும் குளிர்விக்கப்பட்ட நிலையில் அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அதன் சுவை குறைந்துவிடும்.

இதனால் அதன் சுவையை அதிகரிக்க செய்வதற்காக, உப்பு, சர்க்கரை, கொழுப்பு நறுமணம், கலர்பொடிகள் போன்றவை அதிமாக சேர்க்கப்படுகின்றன.

இதில் சேர்க்கப்படும் சல்பைடு, ஆஸ்துமா மற்றும் மனநலப்பிரச்சனைகளை உருவாக்ககூடியது, அதுமட்டுமின்றி இதில் உள்ள சோடியம் வாந்தி, அலர்ஜி, புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.

எவ்வித சத்துக்களும் இன்றி உள்ள ரெடிமெட் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் வளர்ச்சி குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோகும்.

இதனால் நம்மை நோய்கள் தாக்கும்போது, அதனை எதிர்த்து போராட முடியாத அளவுக்கு நமது உடல் பலவீனமடைந்து விடுகிறது.

எனவே, சமையல் செய்யும் காலத்தை குறைக்கும் ரெடிமெட் உணவுகள், உங்கள் ஆயுட் காலத்தையும் குறைத்துவிடும் என்பதை நினைவில் கொள்க.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply