நெல்லூர் சிக்கன்

Loading...

நெல்லூர் சிக்கன்

தேவையானவை:

கோழிக்கறி – 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
வெங்காயம் – 50 கிராம் (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
முட்டைகோஸ் – 20 கிராம் (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
கறிவேப்பிலை – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 50 கிராம்
எலுமிச்சைச் சாறு – 1 (சாறு எடுக்கவும்)
முட்டை – 1 (வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும்)
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – இரண்டரை டீஸ்பூன்
அரிசி மாவு – 50 கிராம்
கடலை மாவு – 70 கிராம்
முந்திரி – 50 கிராம்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க.செய்முறை:

* நன்றாகக் கழுவிய கோழிக்கறியுடன் எண்ணெய் தவிர மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, 20 நிமிடம் ஊற வைக்கவும்.
* காய்ந்த எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள கோழிக் கலவையை பக்கோடா போல் மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply