நெல்லிக்காய் பாயசம்

Loading...

நெல்லிக்காய் பாயசம்
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் – 6, பால் – 2 கப், சர்க்கரை – அரை கப், முந்திரி, பாதாம் – தலா 8 (ஊறவைத்து விழுதாக அரைக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) – ஒரு சிட்டிகை, தேன் – கால் கப்.


செய்முறை:
நெல்லிக்காயை வேகவிட்டு, கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும். இதை தேனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் முந்திரி – பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த தும் தேனில் ஊறவைத்த நெல்லிக் காயை சேர்த்து, ஒரு கிளறு கிளறி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற் பூரம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply