நியூட்ரிஷியஸ் பூரி

Loading...

நியூட்ரிஷியஸ் பூரி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, சீவிய குடமிளகாய் – ஒரு கரண்டி, துருவிய பீட்ரூட் – ஒரு சின்ன கப், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 கப், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கோதுமை மாவை சிறிதளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய், பீட்ரூட் சேர்த்து வதக்கி… மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும். பிசைந்த மாவை சின்ன சின்னதாக, கொஞ்சம் திக்கான பூரிகளாக இடவும். ஒரு பூரி மேல் கொஞ்சம் காய்கறி கலவையை வைத்து, இன்னொரு பூரியை மேலே வைத்து, நன்றாக ஒட்டி கையால் ஒன்றாக சமப்படுத்தவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பூரிகளை பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply