நானும் ரௌடிதான் தெலுங்கு போஸ்டர்களில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம்

Loading...

நானும் ரௌடிதான் தெலுங்கு போஸ்டர்களில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம்

விஜய்சேதுபதி-நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பெரிய ஹிட்டான படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். தனுஷ் தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். தற்போது, தெலுங்கில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் நயன்தாராவுக்கென்று ஒரு தனி மார்க்கெட் உள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 29-ந் தேதி ஆந்திராவில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் ரிலீஸ் தேதியுடன் தெலுங்கு போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டர்களில் எல்லாம் நயன்தாரா புகைப்படத்தை மட்டுமே இடம்பெற்றுள்ளது. கோலிவுட்டைப் போலவே தெலுங்கு உலகிலும் நயன்தாரா முன்னணியில் இருப்பதால், அவரது புகைப்படத்தையே இப்படத்திற்கு புரோமோஷனுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படம் பெரிய ஹிட்டாகும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply