நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு?

Loading...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு ‘தெனாலிராமன்’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ‘எலி’ படத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்த படி வெற்றியடையவில்லை. இதன்பின் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் நடிக்க திட்டமிட்டு இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

இந்நிலையில், வடிவேலு அடுத்ததாக சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நலன் குமாரசாமி தற்போது ‘காதலும் கடந்து போகும்’ என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் வெளியான பிறகு வடிவேலு நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply