தோலை மெருகேற்ற தோள் கொடுக்கும் கொய்யா

Loading...

தோலை மெருகேற்ற தோள் கொடுக்கும் கொய்யாமென்மையான தோலும், சதைப்பற்றுமாக மலிவான விலையில் கிடைக்கும் இந்தப் பழத்தில் இருக்கும் அழகு பலன்கள் ஏராளம். நமக்கு வேண்டிய அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இதன் இலை, பழம், குச்சி போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

* பற்களின் பளிச் வெண்மைக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது கொய்யா இலை. கொய்யா இலையை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரால் தினமும் பல் தேய்த்து வந்தால் முத்துப்போல் பிரகாசிக்கும் பற்களுக்கு சொந்தக்காரராகி விடலாம்.

* காய வைத்த கொய்யா இலை பவுடர் 50 கிராம், சர்க்கரைத்தூள் 20 கிராம், கற்பூரத்தூள் 5 கிராம் என எடுத்து, இந்த மூன்றையும் கலந்து பல் தேய்த்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் ஈறுகளில் வலி, வீக்கம் போன்றவை இருந்தாலும் குணமாகும்.

* என்ன தான் எண்ணெய் வைத்தாலும் வறண்டு போய்க் காட்சியளிக்கிறதா உங்கள் கூந்தல்? அதைப் பளபளப்பாக்கும் டெக்னிக் சிவப்பு கொய்யாவில் இருக்கிறது. கொட்டை இருக்கும் சிவப்பு கொய்யாப் பழத்தை நறுக்கி வெயிலில் உலர்த்தி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூன், கொய்யா இலையை அரைத்து எடுத்த சாறு 3 டீஸ்பூன் இரண்டையும் நன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசுங்கள். வறண்ட கூந்தல் பளபளவென மின்னுவதுடன் கருமையாகவும் மாறும்.

* சர்க்கரை சேர்க்காத கொய்யாப்பழ ஜுஸின் நுரையை நகம், உதடு மற்றும் பாதத்தில் தடவி வந்தால், அவை பட்டுப் போன்று மிருதுவாக மாறுவதுடன் பளபளப்பும் கூடும்.

* குட்டையான கூந்தல் வளர வழி தெரியவில்லையா? தலைக்குக் குளிக்கும் போது கடைசி `மக்’ தண்ணீரில் சிறிது கொய்யாபழ ஜுஸை கலந்து குளியுங்கள். முடி வளர்ச்சி தூண்டப்படுவதுடன் கூந்தலும் மின்னல் போல் டாலடிக்கும்.

* கொய்யா இலையை அரைத்து ஜுஸாக்குங்கள். இதில் ஒரு கப் ஜுஸை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, அரை கப்பாக சுண்டும் வரை காய்ச்சுங்கள். இதனுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை இந்த எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தால், அம்மை, தழும்பு போன்ற அடையாளங்கள் மறைவதுடன் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் பிள்ளைகளை நெருங்காது.

* தோலின் நிறத்தை மெருகேற்றுவதிலும் தோள் கொடுக்கிறது கொய்யா. கொய்யப் பழத்தை விழுதாக அரைத்து முகம் முழுவதும் பூசுங்கள். காய்ந்த பிறகு கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் ஓரிரு மாதங்களிலேயே, உங்கள் சிவப்பழகின் ரகசியத்தை விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

* ச்சே! இந்த முகப்பரு, முகத்தின் வசீகரத்தையே கெடுக்குதே. என்ன செய்றதுன்னே தெரியல என்று டீன் ஏஜ் நண்பர்கள் அதிகமாகவே கவலைப்படுவர். முகப்பருக்களை கிள்ளுவதால் உண்டாகும் தழும்புகளை விரட்டியடிக்க உதவுகிறது. கொய்யாப்பழ இலை. கொய்யா இலையை பேஸ்ட்டாக அரைத்து பரு மற்றும் தழும்புகளில் பூசுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர, முகப்பருவா… அப்படினா என்ன? என்று கேட்பீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply