தேவையற்ற முடியை நீக்க

Loading...

தேவையற்ற முடியை நீக்கஆண்களுக்கு மீசை இருப்பது போல், பெண்களுக்கு முகத்தில் முடி உள்ளது. தேன், குங்குமப்பூ, மஞ்சள் எல்லாம் பூசிப் பார்த்தும் முடி எதுவும் உதிரவில்லை. இந்த முடியைப் போக்க என்ன செய்யலாம்?
தனியாக ஒவ்வொரு ரோமமாக இருந்தால், “த்ரெடிங்’ செய்யலாம். “ப்ளீச்’ செய்தால் ரோமத்தை நீக்க முடியாது. ஆனால், நிறம் மாறும். இதனால், பார்த்ததும் ரோமம், “பளிச்’சென தெரியாது. மீசை போல் இருக்கும் பகுதியிலோ, தாடையிலோ, ஹேர் ரிமூவிங் கிரீம் பயன் படுத்துவதும், “வாக்சிங்’ செய்வதும் நல்லதல்ல. கிரீம்கள் சருமத்தின் அடிப்பகுதி வரை பரவுகிறது. இதனால், சருமத்தின் நிறம் காலப்போக்கில் மாறும். முகத்தில், “வாக்சிங் செய்வதால், சருமம் அதிகமாக நெகிழ்ந்து போகும்
இப்போது எலக்ட்ரோலிசிஸ் மற்றும் லேசர் மூலம் செய்வதால் அதிக பயனுள்ளது. சிறு வயது முதலே, நீங்கள் கஸ்தூரி மஞ்சளை அரைத்து முகத்தில் பூசி வந்திருந்தால், இந்தத் தொல்லையே இருக்காது, செலவும் ஆகாது. “ஹார்மோன்’ சுரப்பதில் ஏற்படும் கோளாறுகளாலும், இப்படி மீசை போல முடி வளரும். அதனால், உங்களுக்கு ரோமம் எதனால் வளர்கிறது என, தெரிந்து கொண்டால், நீக்குவது எளிதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply