தேங்காய் பர்ஃபி

Loading...

தேங்காய் பர்ஃபி
தேவையானவை:
தேங்காய் – ஒன்று, சர்க்கரை – 200 கிராம், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.


செய்முறை:
தேங்காயை வெள்ளைப் பூவாகத் துருவிக்கொள்ளவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து தேங்காய்த் துருவலை லேசாக வதக்கிக்கொள்ளவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். முற்றிய பதம் வந்ததும் (பாகை உருட்டி நீரில் போட்டால் கரையக் கூடாது) வதக்கிய தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும். நன்கு நுரைத்து கெட்டியாக வரும் சமயம் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply