தேங்காய்ப் பால் பிரியாணி

Loading...

தேங்காய்ப் பால் பிரியாணி
தேவையானவை:
சீரக சம்பா அரிசி – 2 கப், முதல் தேங்காய்ப் பால் – ஒரு கப், 2, 3-ம் தேங்காய்ப் பால் – 3 கப், பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, தக்காளி, பெரிய வெங்காயம் – தலா 1, எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 2, 3-ம் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரிசியை வேக விடவும். பாதி அளவு வெந்ததும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply