தூக்கத்திற்கு ஆப்பு வைக்கும் ஸ்மார்ட் போன்!

Loading...

தூக்கத்திற்கு ஆப்பு வைக்கும் ஸ்மார்ட் போன்!ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் பாதிப்பு பற்றிய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜெனிபர்பால்பே தலைமையிலான குழு 2,000 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வின் அறிக்கை படுக்கையறையில் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் வைத்திருக்கும் சிறார்களுக்குத் தூக்கம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.
மேலும் இந்த நவீன சாதனங்களை பயன்படுத்தும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடும்போது 21 நிமிடங்கள் குறைவாகத் தூங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது இரவு தூங்கச்செல்லும் முன் டிவி பார்ப்பதால் ஏற்படும் தூக்கப்பாதிப்பை விட ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் பிள்ளைகளிடம் அதிகப் பாதிப்பு இருப்பதாக இந்த ஆய்வு தெளிவாக விளக்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply