தினை லட்டு

Loading...

தினை லட்டு

தேவையானவை:
தினை – 250 கிராம், வறுத்து, அரைத்த பாசிப்பருப்பு மாவு (தேவைப்பட்டால்), தேன் – தலா 100 கிராம், பனை வெல்லம் – 150 கிராம், முந்திரி, திராட்சை – சிறிதளவு, நெய் – 50 கிராம்.


செய்முறை:
மிதமான சூட்டில் தினையை லேசாக வறுத்து அரைக்க வேண்டும். பனை வெல்லத்தைப் பாகு காய்ச்சி, அரைத்த மாவில் ஊற்றிப் பாசிப்பருப்பு மாவு சேர்த்துப் பிசைய வேண்டும். இதில் தேனை கலந்தும் நன்றாகப் பிசையவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையைப் போட்டு வறுக்கவும். இந்த வறுவலை, பிசைந்த மாவுடன் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான தினை லட்டு ரெடி.


பலன்கள்:
உடலுக்கு வலிமையைத் தரும். வாயுத் தொந்தரவை நீக்கும். தாய்மார்கள் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply