தினை கட்லெட் | Tamil Serial Today Org

தினை கட்லெட்

Loading...

தினை கட்லெட்
தேவையானவை:
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, வேகவைத்த தினை அரிசி – ஒரு கப், இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், வேகவைத்த பச்சைப் பட்டாணி – கால் கப், துருவிய கேரட் – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.

செய்முறை:
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும். அதனுடன், வேகவைத்த தினை அரிசி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, வேகவைத்த பச்சைப்பட்டாணி, துருவிய கேரட், உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை, விருப்பமான வடிவில் தட்டி (தட்டையாகவோ, நீளமாக உருட்டியோ) சூடான தவாவில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுத்தால், கட்லெட் தயார்.

Loading...
Rates : 0
VTST BN