தினை இனிப்புப் பொங்கல்

Loading...

தினை இனிப்புப் பொங்கல்
தேவையானவை:
தினை அரிசி – 100 கிராம், பாசிப்பருப்பு – 30 கிராம், வெல்லம் – 200 கிராம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் – சிறிதளவு, தண்ணீர் – 3 கப், உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியே வறுத்து, நன்றாக ஊறவைக்கவும். அடி, கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, பாகு காய்ச்சவும். ஊறவைத்த தினை மற்றும் பருப்பை, தண்ணீரில் நன்றாக வேகவைக்கவும். வெந்தவுடன் அதில் வெல்லப்பாகை ஊற்றவும். பொங்கல் பதம் வந்தவுடன், ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து, ஏலக்காயைப் பொடித்து, பொங்கலில் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:
குளிர்ச்சித் தன்மையை அளிக்கும் உணவு இது. புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சீக்கிரத்தில் செரிமானம் ஆகும். கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply