தால் பர்ஃபி

Loading...

தால் பர்ஃபி

தேவையானவை:
உளுத்தம்பருப்பு – முக்கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், முந்திரிப்பருப்பு – 10, பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.செய்முறை:
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, முந்திரிப்பருப்பை தனித்தனியே வாசம் வரும் வரை சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். பொடித்த வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டவும். மிக்ஸியில் அரைத்த மாவுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இதனுடன் சூடான நெய், வெல்லக் கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கலந்து, சின்ன அச்சுகளில் மாவை அடைத்து பர்ஃபி செய்யவும். அல்லது, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply