தாய் ரெட் வெஜ் கறி

Loading...

தாய் ரெட் வெஜ் கறி

தேவையானவை:

காய்ந்த மிளகாய் – 75 கிராம்
பூண்டு – 50 கிராம்
எலுமிச்சை இலை – 2 கிராம்
மாங்கா இஞ்சி – 30 கிராம்
செலரி – 3 கிராம் (இவை அனைத்தையும் மிக்ஸில் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். இதுதான் தாய் கறி பேஸ்ட்).
கேரட் – 50 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
முட்டைகோஸ் – 25 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
பீன்ஸ் – 25 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
காளான் – 2 (மீடியம் சைஸில் நறூக்கவும்)
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு – 5 கிராம் (பொடியாக நறுக்கியது)
தேங்காய்ப்பால் – 50 மில்லி
பெரிய வெங்காயம் – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காளான் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்த தாய் கறி பேஸ்ட் சேர்க்கவும்.
* தேவையான அளவு உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.


குறிப்பு:

தக்காளி மற்றும் வெங்காய இலையால் அலங்கரித்து, சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply