தாங்க முடியாத பல் வலியா?

Loading...

தாங்க முடியாத பல் வலியாஅடிப்படையான ஆரோக்கிய குறிப்புகளையும், உடலில் ஏற்படும் சிலவித வலிகளுக்கு இயற்கையான மருந்துகள் பயன்படுத்துவதையும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கீழே சில மருத்துவ பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனை படித்து பயன்பெறுங்கள்.

பல்வலி

சம அளவு புளி, உப்பை எடுத்துக் கசக்கி பல்வலி, பல் எகிர் வீக்கம் உள்ள இடத்தில் வைத்து வாயை மூடிக் கொண்டு இருந்தால், எச்சில் ஊறும். அதைக் கீழே துப்பிவிட வேண்டும்.

இவ்விதம் காலை, பகல், மாலை மூன்று வேளையும் அரை மணி நேரம் செய்தால் பல்வலி குணமாகும்.

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும்.

காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்.

கர்ப்பத்தின் போது உடல் எடை எவ்வளவு அதிகரிக்கலாம்?

உயரத்திற்கேற்ற எடை இருந்தால், 10 முதல், 11 கிலோ வரை எடை கூடலாம். ஆனால், உடல் பருமன் உள்ளவர்கள், 6 கிலோ முதல், 10 கிலோ வரை கூடலாம். உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருப்பவர்கள், 10 கிலோ முதல் 12 கிலோ வரை கூடலாம்.

சைக்கிளிங் நல்லது

மூட்டு வலிக்கு முக்கிய காரணமே, உடற்பயிற்சியின்மை தான். மூட்டு வலியை தவிர்க்க, சைக்கிளிங் சிறந்த வழி. மூட்டு வலி இருப்பவர்கள், எளிதாக சைக்கிளிங் செய்ய முடியும்.

சைக்கிளிங் செய்வது, ‘ஆஸ்டியோபொரோசிஸ், ஆர்த்ரைடிஸ்’ போன்ற மூட்டுப் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும், தொடைகள் வலுவாகும்.

சைக்கிளிங் செய்வதால், கெட்ட கொழுப்புகள் கரையும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

சைக்கிளிங்கின் போது, நுரையீரலின் செயல்பாடுகள் சீராகும். இதய வால்வுகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படும்.

கொழுப்பு குறைவதால், மாரடைப்பு முதலான இதய நோய்கள், ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை தடுக்கப்படுகின்றன.

காலையில் எழுந்து சைக்கிளிங் செய்வதால், மனம் ஒரு நிலை அடைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN