தலை முடி கருமையாக வளர

Loading...

தலை முடி கருமையாக வளரதலை முடி பழுப்பு நிறமுடன் காணப்படுதல் மற்றும் தலைமுடி வறண்டு வலிமை இழந்து காணப்படுபவரகள், இரண்டு கையளவு காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி எண்ணெய்யை எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் நன்கு கருப்பாய் மாறியிருக்கும்.

தினமும் குளிப்பதற்கு முன் சாதாரண எண்ணெய்யை தேய்ப்பதற்குப் பதிலாக நெல்லிக்காய் காய்ச்சிய எண்ணெய்யை தலையில் நன்றாகத் தேய்க்கவும். கால் மணி நேரம் கழித்து குளிக்கவும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் தலை முடி கரூமையாக வளரும். தலை முடி உதிர்வதும் குணமாகும்.

இதே போல கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலையும் முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து மேற்சொன்னது போல எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு தலைமுடியில் தேய்த்து வந்தால் கருமையான முடியைப் பெறலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply