தமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல்

Loading...

தமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல்

விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் ‘தெறி’. இதில் சமந்தா, எமிஜாக்சன், ராதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். அட்லி இயக்கும் இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ‘தெறி’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட பணிகள் தொடங்க இருக்கின்றன.

‘தெறி’ படத்தின் ‘டீசர்’ அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘தெறி’ படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேநாளில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘24’ படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா 3 ‘கெட்அப்’களில் நடிக்கிறார்.

விஜய்–சூர்யா படங்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மோதுவதால் இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply