தந்தை வழியை பின்பற்றும் கவுதம் கார்த்திக்

Loading...

நடிகர் கார்த்திக் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பொன்னுமணி படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த பாட்டில் நாயகியை கார்த்திக் முதுகில் தூக்கி வருகிறார்.

அதேபோல், தற்போது அவரது மகன் கவுதம் கார்த்திக் நடித்து வரும் ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நாயகி பிரியா ஆனந்தை முதுகில் தூக்கி வருவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. அனேகமாக கார்த்திக் நடித்த படத்தின் பாடலின் ரீமேக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

‘முத்துராமலிங்கம்’ படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக பிரியா ஆனந்த் மற்றும் கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுத, இளையராஜா இசையமைக்கிறார். குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது ராஜபாளையத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Loading...
Rates : 0
VTST BN