டிரை ஃப்ரூட்ஸ் பிரியாணி

Loading...

டிரை ஃப்ரூட்ஸ் பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப், பிரியாணி இலை – 2, பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, நெய் – 3 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் சேர்ந்த கலவை – கால் கப், குங்குமப்பூ – சிறிதளவு, பால் – கால் கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா பருப்புகளை போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். அரிசி, பால், தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும். அரிசி பாதி அளவு வெந்ததும், குங்குமப்பூ, வறுத்த டிரை ப்ரூட்ஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து லேசாகக் கிளறி, குக்கரை மூடி, சிம்மில் 7 முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிரியாணி இது!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply