ஜியோமி அறிமுகப்படுத்தும் லேப்டாப்

Loading...

ஜியோமி அறிமுகப்படுத்தும் லேப்டாப்ஸ்மார்ட் போன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜியோமி புத்தாண்டில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஜியோமியின் முதல் லேப்டாப்பாக இருக்கும். புகைப்படத்துடன் இந்த லேப்டாப் அமசங்கள் பற்றிய விவரங்களும் வெளிவந்துள்ளன.
இந்த லேப்டாப் இண்டெல் சிப், 15 இன்ச் டிஸ்பிலே, மற்றும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்ஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும், இதன் விலை 481 டொலர் வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்மார்ட் போன் வடிவமைப்பில் ஆப்பிளின் வடிவமைப்பை நகலெடுப்பதாகக் குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், இந்த லேப்டாப் ஆப்பிளின் மேக்புக் போலவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜியோமி புதிய சுற்று நிதியைப் பெற்று சந்தை மதிப்பையும் 45 பில்லியன் டொலராக அதிகரித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply