சோள முறுக்கு

Loading...

சோள முறுக்கு
தேவையானவை:
இருங்கு சோளம் அல்லது செஞ்சோளம் – 200 கிராம், சீரகத் தூள் – 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
சோளத்தை அரைத்து மாவாக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த் தூள், சீரகத் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு, நல்ல பதமாகப் பிசைய வேண்டும். பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு வெள்ளைத் துணியில் பிழிந்து, வெயிலில் காயவைத்து, பிறகு எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். அருமையான சோள முறுக்கு தயார்!

பலன்கள்:
சோளத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ரத்தசோகை இருப்பவர்களுக்கு நல்லது. பீட்டாகரோட்டின் இருப்பதால், கண்ணுக்கு நல்லது. சிறுநீரைப் பெருக்கும். உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும். மூலநோய் இருப்பவர்கள் தவிர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply