சோனியின் புதிய கைப்பேசிக்கான முற்பதிவுகள் ஆரம்பம் | Tamil Serial Today Org

சோனியின் புதிய கைப்பேசிக்கான முற்பதிவுகள் ஆரம்பம்

Loading...

சோனியின் புதிய கைப்பேசிக்கான முற்பதிவுகள் ஆரம்பம்சோனி புதிதாக வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ள Xperia M4 Aqua ஸ்மார்ட் கைப்பேசிக்கான முற்பதிவுகள் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஜேர்மனிக்கான அமேஷான் தளமானது இக்கைப்பேசிக்கான முற்பதிவினை 279 பவுண்ட்ஸ் பெறுமதியில் ஆரம்பித்துள்ளது.
இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினையும், Octa Core 64-bit Snapdragon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 8 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிசல்களை உடைய வீடியோ அழைப்புக்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் அடுத்த மாதமளவில் இக்கைப்பேசி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN