சொந்த குரலில் பேசி நடிக்கும் ஸ்ரீதிவ்யா

Loading...

சொந்த குரலில் பேசி நடிக்கும் ஸ்ரீதிவ்யா

சமீபகாலமாக கதாநாயகிகள் சொந்த குரலில் பேசி நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நயன்தாரா முதன் முதலாக சொந்த குரலில் பேசி நடித்தார். இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அவரது குரலும் வலு சேர்த்தது.

நயன்தாராவை தொடர்ந்து இன்னும் சில கதாநாயகிகள் சொந்த குரலில் பேச முடிவெடுத்திருக்கிறார்கள். சீனுராமசாமியின் ‘தர்மதுரை’ படத்தில் கதாயாநாயகியாக நடிக்கும் தமன்னா சொந்த குரலில் பேசி நடிக்கிறார். இந்த வரிசையில் தற்போது ஸ்ரீதிவ்யாவும் இணைந்திருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் சொந்த குரலில் பேசியுள்ளார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஸ்ரீதிவ்யா, இதுவரை ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பொதுவாக தமிழை தாய்மொழியாக கொண்ட நடிகைகள் சொந்த குரலில் பேசி நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட நடிகைகள் தமிழில் சொந்த குரலில் பேசி நடிக்க ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply