செவ்வாயில் மர்மமான மூடுபனி – குழப்பத்தில் விஞ்ஞானிகள்

Loading...

செவ்வாயில் மர்மமான மூடுபனி – குழப்பத்தில் விஞ்ஞானிகள்செவ்வாய்க் கிரகத்தில் மர்மமான மூடுபனி நிலை அவதானிக்கப்பட்டிருப்பது வானியலாளர்களுக்கு மத்தியில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரமாண்டமான மூடுபனி நிலை 2012 ஆம் ஆண்டு தன்னார்வ விண்ணியல் ஆராய்ச்சியாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் இந்த மூடுபனி நிலை இரு முறை தோன்றி மறைந்துள்ளது.
அது குறித்த புகைப்படங்களை ஆராய்ந்திருக்கும் விஞ்ஞானிகள் இந்த மூட்டம் சுமார் 1,000 கிலோமீற்றர் வரை தோன்றி இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இந்த மூட்டம் பாரிய மேகமாக அல்லது துருவ ஒளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இது குறித்த விபரம் ஜெர்னல் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த இரு கோட்பாடுகளில் எது சரியாக இருந்தாலும் செவ்வாயின் மேல் வளிமண்டலம் குறித்து இதுவரை நம்பி வந்த புரிதல்கள் தவாறாகிவிடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் செவ்வாய் கிரகத்தின் மெல்லிய மேல்பகுதி வளிமண்ட லத்தில் இந்த மூட்டம் எவ்வாறு தோன்றியது என்பதை விஞ்ஞானிகளால் விளக்க முடியாதுள்ளது. “இதனால் பதில்களை விடவும் கேள்விகளே எழுகின்றன” என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் கிரகங்கள் தொடர் பான விஞ்ஞானியான அன்டோனியோ கிராசியா முனோஸ் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் விண்கலங்கள் மற்றும் தொலை நோக்கிகளைக் கொண்டு இந்த மர்மத்தை விடுவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply