சென்னையில் மீண்டும் பிரேமம்

Loading...

சென்னையில் மீண்டும் பிரேமம்

சென்னையில் மீண்டும் பிரேமம்

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான மலையாள படம் பிரேமம். இப்படம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழ்நாட்டில் வெளியானது.

இங்கேயும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சென்னையில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தொடர்ந்து 230 நாட்களாக ஓடிய இப்படம் பொங்கல் தினத்தன்று ‘கதகளி’, ‘தாரை தப்பட்டை’, ‘கெத்து’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியானதால் ‘பிரேமம்’ படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இப்படம் திரையிடப்படுகிறது. இதனால் பிரேமம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இப்படம் அதிகம் வரவேற்பு பெற்று வருவதால் சென்னை வாசிகளின் அன்புக்கு மிகவும் நன்றி என்று இப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியிருக்கிறார்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN