சூரிய மண்டலத்தை நெருங்கிய வேற்று நட்சத்திரம்

Loading...

சூரிய மண்டலத்தை நெருங்கிய வேற்று நட்சத்திரம்70,000 ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தின் ஊடாக வேற்று நட்சத்திரம் ஒன்று பயணித்திருப்பதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேறு எந்த நட்சத்திரமும் சூரிய மண்டலத்தை இவ்வளவு நெருங்கியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது சூரிய மண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் ‘பிரொக்சிமா சென்டவுரி” நட்சத் திரத்தை விடவும் குறித்த நட்சத்திரம் ஐந்து மடங்கு நெருங்கி வந்திருப்பதாக சர்வதேச ஆய்வுக் குழுவொன்று குறிப்பிட்டுள்ளது.
ஹெல்ஸ் என அழைக்கப்படும் இந்த சிகப்பு குள்ள நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதியான ஊட் மேக மண்டலத்தின் ஊடாக பயணித்துள்ளது.
இதில் ஹெல்ஸ் நட்சத்திரம் தனியாகவன்றி அதனுடன் பளுப்பு குள்ள நட்சத்திரம் ஒன்று சூரிய மண்டலத்தின் ஊடே பண்டைய காலத்தில் பயணித்துள்ளது. பளுப்பு குள்ள நட்சத்திரம் என்பது ஒரு செயலிழந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.
ஆஸ்ட்ரோபிசிகல் ஜெர்னல் இதழில் இந்த கண்டுபிடிப்பின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மங்கலான நட்சத்திரத்தின் பயணப்பாதையை ஆய்வு செய்தபோது இந்த நட்சத்திரம் 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் எமது சூரியனில் இருந்து 0.8 ஒளியாண்டு தொலைவில் பயணித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
சூரிய மண்டலத்திற்கு அருகில் இருக்கும் பிரொக்சிமா சென்டவுரி நட்சத்திரம் 4.2 ஒளியாண்டு தெலைவில் காணப்படுகிறது. இந்த நட்சத்திரம் தற்போது 20 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply