சுகப்பிரசவமாக தேன் சாப்பிடுங்க

Loading...

சுகப்பிரசவமாக தேன் சாப்பிடுங்ககர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதம் முதல் சாதம் கொதிப்பதில் முதல் கொதி வந்ததும் அந்த கொதிநீரை ஒரு டம்ளர் எடுத்து சிறிது பணங்கற்கண்டு சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்க வேண்டும். சிறிது வெந்தயம் சிறிது பச்சரிசி 5 பல் பூண்டு மூன்றையும் குழைய வேகவைத்து கடைந்து குடிக்கலாம்.

பாலுடன் பூண்டை உரித்து போட்டு நன்கு வேகவைத்து கடைந்து இரவில் இதனை சாப்பிடலாம். கர்ப்பிணிபெண்கள் மாதுளம் பழம் ஜூஸ் குடிக்கலாம். தாய், சேய் இருவருக்கும் மிகவும் சிறந்தது மட்டுமில்லாமல் ரத்தம் விருத்தியாகும்.

கர்ப்பிணிபெண்கள் ஒன்பதாவது மாதம் முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாய் குருந்தோட்டி வேர் கஷாயம் சாப்பிடலாம். சோம்பை சிறிது வறுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து ஒன்பதாம் மாதம் முதல் குடிக்க வேண்டும்.

இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரை இடுப்பு கால்களுக்கு ஊற்றி கொள்ள வேண்டும். பிரசவவலி எடுத்தவுடன் தேனை எதுவும் கலக்காமல் நேரடியாக உள்ளுக்குள் சாப்பிடவேண்டும். மீதமுள்ள தேனை கருஞ்சீரகம் பொடி கலந்து வயிற்றைச் சுற்றித் தடவினால் எந்த வித சிரமமும் இன்றி சுகப்பிரசவம் ஏற்படும்.

இது தவிர நாடி சுத்தி பிராணயாமத்தையும் பக்தகோணாசனம் என்ற கர்ப்பஸ்திரீகள் செய்யக்கூடிய ஆசனத்தையும் விடாமல் செய்து வர வேண்டும்.

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை தெரிந்துக்கொள்ள கர்ப்பமான பெண்ணின் தனத்தில் சுரக்கும் தாய்ப்பால் துளித்துளியாக சிறிதளவே வருமானால் ஆண்குழந்தை, கெட்டியாக பிசின் போல சிரமத்துடன் வருமானால் பெண்குழந்தை என்று தெரிந்துகொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply